Wednesday, October 24, 2018

அன்றாட வாழ்வில் கணிதம்

தலைப்பு : பின்னங்கள்
கலப்பு பின்னம் ,தகா பின்னம் அன்றாட வாழ்வில் பயன்படும் இடம் மற்றும் முறை?
ஒழுங்கற்ற பின்னங்களை கலப்பு எண்களாக, மற்றும்
எதிர்மாறாக எவ்வாறு மாற்ற வேண்டும் என்று பார்ப்போம்.
முதலில் இதன் பெயர்க்காரணங்களை கூறுகிறேன்.
கலப்பு எண்கள் என்றால் என்ன ?
நீங்கள் பார்த்திருக்க கூடும்,
உதாரணமாக, 2 மற்றும் 1/2.
இது ஒரு கலப்பு எண்.
இதை ஏன் கலப்பு எண் என்று கூறுகிறோம்?
ஏனென்றால், இதில் ஒரு முழு எண்ணையும் ஒரு பின்னத்தையும் கலக்கிறோம்.
ஆகையால், இது கலப்பு எண் எனப்படுகிறது.
ஒரு முழு எண், ஒரு பின்னத்துடன் கலந்துள்ளது.
எனவே, இது 2 மற்றும் 1/2.
2 1/2 என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறன்.
2 1/2 என்கிற எண் 2 க்கும் 3 க்கும் இடையில் இருக்கும்.
என்னிடம்
5 ரூபாயும்
50 பைசாவும் இருக்கிறதென்றால் அதை கலப்பு பின்னத்தில் கூறுவேன்.
(அதாவது ரூபாயுடன் பைசாவை கலந்து கூறுவேன்.)
நான் கொஞ்ச ஜாலியாக இப்படி சொல்வது உண்டு..
நீ பாட்டி கடைக்குப் போற..,
ஒரு பொட்டலம் சர்க்கரை வாங்குற..,
அப்புறம் கொசுறு சர்க்கரை வாங்கி சாப்பிடறல ..அப்படி தான்..கலப்பு பின்னமும்..
பொட்டலம் முழு என்
கொசுறு(உதிரி) தகு பின்னம்..

No comments:

Post a Comment